மஸ்னவி எனும் மாபெரும் இலக்கியம் கதை கவிதை எனும் கூறுகளை உள்ளடக்கியது. இதனை பாரசீக மொழியில் இயற்றியவர் மௌலானா ஜலாலுத்தீன் ரூமி (ரஹ்) என்ற இறைஞானியே ஆவார்கள்.
இவர்கள் மஸ்னவியை அவர்களது வாழ்வின் இறுதி காலங்களில் தான் அருளினார்கள், இன்னும் சொல்லப் போனால் அவர்கள் இறுதியாக எழுதிய கதை/கவிதை முழுமை பெறாமலே உள்ளது. மஸ்னவியை 54 அல்லது 57 வயதிலிருந்து (1258 - 1261) மரணம் வரும் வரை (1273) எழுதிக் கொண்டே இருந்தார்கள்.
மஸ்னவி எனும் நூலானது சூபி எனப்படும் இறைஞானிகளின் கதைகள், நீதி கதைகள் மற்றும் ஆன்மீக போதனைகளை அடிப்படையாக கொண்டது. உண்மையில் இது, குரான் ஷரீபின் விளக்கங்களாகவும் குறிப்புகளாகவும்
அமையப் பெற்றுள்ளது.
ரூமி (ரஹ்) அவர்களே மஸ்னவியை பற்றி குறிப்பிடும் போது, "இது (இஸ்லாம்) மார்க்கத்தின் வேருக்கு வேருக்கு வேராகவும் குரான் ஷரீபின் விளக்கமாகவும் உள்ளது (வ ஹூவா உஸுலு உஸுலு உஸுலுத் தீன்)" என்றார்கள்
No comments:
Post a Comment