Friday, January 22, 2016

பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் நம்மை போன்ற மனிதரல்ல

பகுதி 1:

இதயத்தில் அழுக்குள்ளவர்கள் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை “நம்மை போன்ற ஒரு மனிதர் தான்” என்று சொல்வார்கள். 

இதயத்தை சுத்தமாக்க பயிற்சி எடுப்பவர்கள் (சூஃபியாக்களின் வழியில் பயணிப்பவர்கள்) அப்படி அழுக்குள்ளவர்கள் சொன்னதை எழுதியதற்கு கூட மன்னிப்பு கோருவார்கள்.

அப்படி அழுக்குள்ளவர்கள் தங்களது கீழான சிந்தனையின் உதவிக்கு ஆதாரமாக குரான் ஷரீஃபின் வாக்கியத்தை கொண்டு வருவார்கள். அப்படி அவர்கள் கொண்டு வந்த ஆயத்து கீழே வருகிறது.

குரான் ஷரீஃப்
18. சூரா கஹ்ஃபு
110வது வாக்கியம்

  قُلْ اِنَّمَاۤ اَنَا بَشَرٌ مِّثْلُكُمْ يُوْحٰٓى اِلَىَّ اَنَّمَاۤ اِلٰهُكُمْ اِلٰـهٌ وَّاحِدٌ‌  ۚ فَمَنْ كَانَ يَرْجُوْالِقَآءَ رَبِّهٖ فَلْيَـعْمَلْ عَمَلًا صَالِحًـاوَّلَايُشْرِكْ بِعِبَادَةِ رَبِّهٖۤ اَحَدًا‏ 

(நபியே!) நீர் சொல்வீராக: “நிச்சயமாக நான் உங்களை போன்ற ஒரு மனிதனே! நிச்சயமாக உங்களுடைய நாயன் ஒரே நாயன் தான் என்று எனக்கு வஹீ அறிவிக்கப்பட்டிருக்கிறது; எவன் தன்னுடைய இறைவனைச் சந்திக்கலாமென ஆதரவு வைக்கின்றானோ அவன் (ஸாலிஹான) நல்ல செயல்களைச் செய்து, தன் இறைவனை வணங்குவதில் வேறெவரையும் இணையாக்காதும் இருப்பானாக.”

நன்றி: http://www.tamililquran.com/qurandisp.php?start=18 

”பார்த்தீர்களா? எவ்வளவு தெளிவாக இருக்கின்றது” என்று மார்தட்டுவார்கள் அந்த அழுக்குவாசிகள். இந்த ஆயத்தை எப்படி விளங்குவது என்பதை பார்ப்போம்.

ஒரு பகுதி மட்டும் வார்த்தைக்கு வார்த்தை அர்த்தம்

குல் - சொல்வீராக..!
இன்னமா (அரபி எழுத்தில் “இ” என்ற எழுத்தில் “அலிஃப்” அல்ல “அம்ஜா” பயன்படுத்தப்பட்டிருக்கிறது சில குரான் ஷரீஃப் பிரதிகளில் என்பதை கவனத்தில் கொள்க) - Only/ Indeed - நிச்சயாமாக..!
அனா - I - நான்
பஷருன் - (am) a man - மனிதன்
மிஸ்லுகும் - like you - உங்களைப் போன்ற 

பகுதி 2:

மேற்கொண்டு படிக்கும் முன்னர் முக்கிய மூன்று செய்திகள் தெரிந்து கொள்ள வேண்டியதிருக்கிறது:

1. “குல்’ என்ற வார்த்தை.. அதாவது “சொல்லுங்கள்..” என்ற வார்த்தை. அல்லாஹ் மேலே படித்த, “உங்களை போன்ற மனிதன்” என்பதை பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை மட்டும் தான் சொல்ல சொல்லியிருக்கிறான்.. “யா அய்யுஹல்லதீன ஆமனு..” என்று முஃமீன்களை பார்த்து இந்த வார்த்தையை சொல்லவில்லை. ஆகையினால், இது பெருமானாருக்கு மட்டும் சொல்ல சொன்ன வார்த்தை. வேறு யாருக்கும் இதை சொல்ல அனுமதியில்லை.

இஜட்.ஜபருல்லாஹ் நானா அவர்கள் ஒரு உதாரணம் சொல்வார்கள், ஒரு பெரிய கோடீஸ்வரர் தன்னை தாழ்த்திக் கொண்டு, “நான் என்னங்க... ஒரு முஸாஃபர்..” என்று சொன்னால்... நீங்கள், “அப்படியா இந்தாங்க சோத்து சீட்டு.. பாபா பாய் கடைல கொடுத்தீங்கன்னா சோறு கறி கொடுப்பாரு”ன்னு சொல்லக் கூடாது என்று சொல்வார்கள்.

2. “பஷருன்” என்ற வார்த்தை... “பஷருன்..” என்றால் apparent skin/ apparent feature/ physical form அதாவது வெளிப்புற தோல்.. என்று அர்த்தம். அரபியில் ஒரு வார்த்தைக்கு நூறு அர்த்தம் இருக்கும். “ஸலாத்” என்ற வார்த்தைக்கு “தொழுகை” என்று சொல்கிறோமே, அந்த ஒரு வார்த்தைக்கு மட்டும் 90 அர்த்தங்கள் இருக்கிறதாம்..
”பஷருன்” என்ற வார்த்தைக்கு எதிர்பதம் “ஜின்” (hidden) என்பதாகும்

3. அரபிய இலக்கணத்தில் “இஸ்திஃபாமியா” என்றால் கேள்விகள் என்று அர்த்தம். Dr. Fatai Owolabi Jamiu என்ற நைஜீரிய நாட்டில் உள்ள Ogun மாநிலத்தில் உள்ள அரபிய கல்லூரியில் ”A Transformational- Generative Approach towards Understanding Al-Istifham” என்று ஆய்வு செய்து ஒரு கட்டுரை வெளியிட்டு இருக்கிறார். இது இணையத்தில் பிடிஎஃப் கோப்பாக படிக்க கிடைக்கிறது. இதில் இஸ்திஃபாம் பற்றி 41/42ம் பக்கத்தில் இஸ்திஃபாமுக்கு இவ்வாறு விளக்கமளித்துள்ளார். 

Seeking for an information on something that is not Known before and always answered by specifying the information required or by using one of the answer tools”. 
அதாவது, “முன்னர் அறியப்படாத சில தகவல்களை அறிய முற்படுவதும் எப்பொழுதும் தேவையான பதிலை சொல்வதும் அல்லது பதில் சொல்லும் முறைகளை ஒன்றை பயன்படுத்துவதும் ஆகும்”

அதாவது, ஒரு கேள்வி கேட்கப்படும், அந்த கேள்விக்கு உள்ள பதில் தெரியாது, எப்போதும் பதில் தொடர்ந்து சொல்லப்படும்.

இத்தகைய இஸ்திஃபாமா வகை கேள்வியை பல வகையாக பிரிக்கலாம், அதில் ஒரு வகை அம்ஜா கேள்விகள் என்று ஒன்று உண்டு. (பார்க்க டாக்டரின் ஆய்வு கட்டுரை பக்கம் 42)

أقرأت الكتاب ؟ 
(இக்ர அல் கிதாப்) 

வார்த்தைக்கு வார்த்தை மொழி பெயர்த்து பார்த்தால்  - ”கிதாபை படி” என்று ஒரு செய்தி போல் தான் வரும். ஆனால் அதுவே முதல் எழுத்தில் “அம்ஜா” எனும் அரபி எழுத்து சேர்ந்து விட்டால் அதை கேள்வியாக படிக்க வேண்டும்.”கிதாபை படித்தாயா? - Did you read the book?" என்று.

மேலே சொன்ன மூன்று செய்திகளையும் மனதில் வைத்துக் கொண்டு கீழே உள்ளளதை படியுங்கள்:

பகுதி 3:

மேலே வார்த்தைக்கு வார்த்தைக்கு மொழி பெயர்த்திருக்கும் 4 வார்த்தைகளை மட்டும் தமிழில் எழுதுவதாக இருந்தால் எப்படி எழுதுவோம்.
“சொல்வீராக...! நிச்சயமாக நான் உங்களை போன்ற மனிதன்.”

நான் அதே வாக்கியத்தை கொஞ்சம் மாத்தி எழுதறேன்.. இப்போது படித்து பாருங்கள்..
“சொல்வீராக...! நிச்சயமாக நான் உங்களை போன்ற மனிதன்?”

என்ன வித்தியாசம் என்றால் முதல் மொழிபெயர்ப்பின் வார்த்தையின் இறுதியில் முற்றுப்புள்ளி இருந்தது இரண்டாவது மொழிபெயர்ப்பின் வார்த்தையின் இறுதியில் கேள்விக்குறி இருக்கிறது.

’இன்னமா” என்று ஆரம்பிக்கும் வார்த்தையில் “அலிஃப்” அல்லாமல் “அம்ஜா” வந்திருந்தால் அது அரபி கிராம்மரில் (இஸ்திஃபாமியா) கேள்வி போல் படிக்க வேண்டும் என்று ஒரு சரத்து உள்ளது.

உதாரணமாக, 6. சூரத்துல் அன்ஆம்
76வது வாக்கியம்

”ஆகவே அவரை இரவு மூடிக் கொண்டபோது அவர் ஒரு நட்சத்திரத்தை பார்த்தார், “இதுதான் என் இறைவன்!” என்று கூறினார்.....”

இந்த வாக்கியத்தில் இப்ராஹீம் நபியவர்கள் நட்சத்திரத்தை பார்த்து “இதுதான் என் இறைவன்! (ஹாதா ரப்பி என்ற அரபி வார்த்தை)” என்று ஒரு செய்தியாக கூறினார்கள் என்று படித்து வந்திருக்கின்றோம். அப்படியல்ல.. இப்ராஹீம் நபி அலைஹிஸ்ஸலாத்து வஸலாம் அவர்கள் எந்த காலத்திலும் எதனையும் இறைவன் என்று கூறவில்லை. குரான் ஷரீஃப் முழுக்க இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாத்தை பற்றி அல்லாஹ் “ஹனிஃப்” (பார்க்க: 3வது ஸூரா 67வது ஆயத்) என்பதாக புகழ்ந்து கூறுகிறான்.

அப்போ இந்த வாக்கியத்தை எப்படி படிக்கணும்னா இறுதியில் ஒரு கேள்விக்குறியை சேர்த்து படித்து பார்க்க வேண்டும். இதற்கு பெயர் அரபி இலக்கணத்தில் “இஸ்திஃபாமியா - கேள்விகள்” என்று சொல்லப்படுகிறது. அம்ஜா மறைவாக உள்ளது.

”ஆகவே அவரை இரவு மூடிக் கொண்டபோது அவர் ஒரு நட்சத்திரத்தை பார்த்தார், “இதுதான் என் இறைவன்?” என்று கூறினார்.....”

அதாகப்பட்டது, இதுதான் என் இறைவன் என்று ஆச்சர்யப்பட்டவில்லை, அவர்கள் கேள்வியாக கேட்கிறார்கள், “இதுவா என் இறைவன்?” என்று - நிச்சயமாக இல்லை என்ற தொனியோடு கேட்கிறார்கள்.

அதனால் தான் அந்த கேள்விக்கு பதிலளிக்கும் விதமாக ”... ஆனால் அது மறைந்த போது அவர், “நான் மறையக் கூடியவற்றை நேசிக்க மாட்டேன்” என்று சொன்னார்” என்று வருகிறது.

அதே போல் தான் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை மக்கத்து காபிர்கள் “என்னா பெரிய தூதுவர், எங்களை போன்ற மனிதர் தான்” என்று அவர்கள் கூறிய போது, பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை பார்த்து நீங்கள் சொல்லுங்கள், “நான் என்ன உங்களை போல மனிதனா?” - நிச்சயமாக இல்லை என்ற தொனி இங்கே இருக்கின்றது.

அதனால் தான் அந்த கேள்விக்கு பதிலளிக்கும் விதமாக ”...  (யூஹா இலய்ய) எனக்கு வஹி வருகின்றது....” என்று சொல்கிறார்கள்.

Thursday, January 7, 2016

குரான் ஷரீஃபில் ஹஜ்ரத் முஹம்மத் (ஸல்)

பெருமானார் (ஸல்) அவர்களின் மேன்மைமிக்க பதவி



ஸூரத்துல் மாயிதா (5)
வசனம் 15

பேரொளி - நூர் - Sacred Light

வேதமுடையவர்களே! மெய்யாகவே உங்களிடம் நம்மிடைய தூதர் வந்திருக்கின்றார்; வேதத்திலிருந்து நீங்கள் மறைத்து கொண்டிருப்பவற்றில் பல விஷயங்களை உங்களுக்கு விளக்கி காட்டுவார். இன்னும் அநேகத்தை விட்டுவிடுவார் (forgiving much). நிச்சயமாக அல்லாஹ்விடமிருந்து பேரொளியும் தெளிவுமுள்ள வேதமும் உங்களிடம் வந்திருக்கின்றது.

2

ஸூரத்துல் அஹ்ஜாப் (33)
வசனம்: 56

அல்லாஹ்(ஜல்) அருள் புரிகிறான் - ஸலாம், ஸலவாத், தஸ்லீமாத் -Allah Blesses Him

இந்த நபியின் மீது அல்லாஹ் அருள் புரிகிறான். மலக்குகளும் அவருக்காக அருளைத் தேடுகின்றனர்.  நம்பிக்கையாளர்களே! நீங்களும் அவர் மீது ஸலவாத்து சொல்லி அவர் மீது ஸலாமும் சொல்லுங்கள்.

3

ஸூரத்துல் அன்பியா (21)
வசனம்: 107

அகிலத்தாருக்கெல்லாம் அருட்கொடை ரஹ்மத்தல் லில்ஆலமீன் - Mercy for all the Worlds

நாம் உம்மை அகிலத்தாருக்கெல்லாம் (meaning, not just send for one community, He (upon Him be holy benedictions) sent down as Mercy for the entire humanity and all the worlds) ஒரு அருட்கொடையாக வேயன்றி அனுப்பவில்லை


4

ஸூரத்து முஹம்மத் (ஸல்) (47)
வசனம்: 2

பெயரே புகழுக்குரியவர் (புகழப்பட்டவர்) - முஹம்மது (ஸல்) - His Name is Muhammad (Meaning the Most Praised One)

ஆனால், எவர்கள் நம்பிக்கை கொண்டு, நல்ல அமல்களை செய்து,முஹம்மத் (ஸல்) அவர்கள் மீது இறக்கி அருளப்பட்டவையின் மீது - இது அவர்களுடைய இறைவனிடமிருந்துள்ள உண்மையாக இருக்கிறது என்று நம்பிக்கை கொள்கிறார்களோ, அவர்களுடைய தீமைகளை அவர்களை விட்டும் போக்கி, அவர்களுடைய நிலையையும் சீராக்குகின்றான்.

5

ஸூரத்து அலம் நஷ்ரஹ் (94)
வசனம்: 4

அவர்களை நினைவு கூர்வதை மேலோங்கச் செய்வது - வரஃபனா லக திக்ரக் - Allah has exalted his Zikr

மேலும், நாம் உமக்காக உம்மை நினைவு கூர்வதை மேலோங்கச் செய்தோம்

6

ஸூரத்துந் நஜ்ம் (53)
வசனம்: 8 - 9

மிஹ்ராஜ் இரவில் அவர்களின் நிலை உயர்த்தப்பட்டது - சும்ம தனா ஃபததல்லா ஃப கான காப கவ்சைனி அவ்அத்னா - His Exaltation in the night of Mihraj

பின்னர், அவர் நெருங்கி, இன்னும், அருகே வந்தார்
வில்லின் இரு முனைகளைப் போல், அதினும் நெருக்கமாக வந்தார்

(Then he drew near, then he came closer 
Till he was (distant) two bows' length or even nearer)

7

ஸூரத்து பனீ இஸ்ராயில் (17)
வசனம் 79

புகம் பெற்ற தலம் - மகாமம் மஹ்மூதன் - His Station of Praise

இன்னும் இரவின் பகுதியில் உமக்கு உபரியான தஹஜ்ஜத் தொழுகையை தொழுது வருவீராக; உம்முடைய இறைவன் புகழ் பெற்ற தலத்தில்உம்மை எழுப்ப போதும்

அல்லாஹ்வின் நேசர்களில் முதன்மையானவர்கள் 

8

ஸீரத்துல் ஆல இம்ரான் (3)
வசனம்: 31

அல்லாஹ் உங்களை நேசிக்க வேண்டுமென்றால் நீங்கள் முஹம்மத் (ஸல்) அவர்களை பின்பற்ற வேண்டும் - ஃபத்தபிஊனி யுஹ்பிப்குமுல்லாஹு -  If you want to gain the love from Allah then follow him (upon Him be holy benedictions)

நீர் கூறும்: நீங்கள் அல்லாஹ்வை நேசீப்பீர்களானால் என்னைப் பின்பற்றுங்கள்; அல்லாஹ் உங்களை நேசிப்பான்; உங்கள் பாவங்களை உங்களுக்காக மன்னிப்பான்; மேலும், அல்லாஹ் மிக்க மன்னிப்பவனாகவும் மிக்க கருணைய உடையவனாகவும் இருக்கின்றான்.

9

அல்லாஹ் முஹம்மத் (ஸல்) அவர்களை மிகவும் அன்பாகவும் கருணையாகவும் அழைக்கின்றான் - Allah addresses him with love and affection

A

ஸூரத்து தாஹா (20)
வசனம்: 1

தாஹா

B

ஸூரத்து யாஸீன் (36)
வசனம்: 1

யாஸீன்

C

ஸீரத்துல் முஸ்ஸம்மில் (73)
வசனம்: 1

போர்வை போர்த்திக் கொண்டிருப்பவரே!

(O you wrapped up in your raiment)

D
ஸூரத்துல் முத்தஸ்ஸிர் (74) 
வசனம்: 1


போர்த்திக் கொண்டிருப்பவரே! 

(O you enveloped in your cloak)

10

ஸூரத்துல் ஹுஜுராத் (49)
வசனம்: 7

”அறிந்து கொள்ளுங்கள்! அல்லாஹ்வின் தூதர் உங்களிடையே இருக்கிறார்” என்று அல்லாஹ் கூறுகிறான் - ரஸூலுல்லாஹ் - Allah says: Realise that My Prophetic Messenger himself is with you

அறிந்துகொள்ளுங்கள்; நிச்சயமாக உங்களிடையே அல்லாஹ்வின் தூதர்  இருக்கிறார்; அநேக காரியங்களில் அவர் உங்களுக்கு வழிபட்டால், திடமாக நீங்கள் தாம் கஷ்டத்திற்குள்ளாவீர்கள், எனினும் அல்லாஹ் நம்பிக்கையை உங்களுக்கு பிரியமுடையதாக்கி உங்கள் இதயங்களிலும் அதனை அழகாக்கியும் வைத்தான் - அன்றியும் நிராகரிப்பையும், பாவத்தையும், மாறு செய்வதையும் உங்களுக்கு வெறுப்பாகவும் ஆக்கினான்; இத்தகையவர்கள் தாம் நேர்வழியில் நடப்பவர்கள்.

11

ஸூரத்துத் தவ்பா (9)
வசனம்: 128

அல்லாஹ் மிக்க கருணையாளன், மிக்க கிருபையாளன் என்ற தனது தன்மை பெயர்களை முஹம்மத் (ஸல்) அவர்கள் மீது சூட்டுகிறான் - ரஊப், ரஹீம் -  Allah describes Hajrath Mohamed (Sal) with His own attributes of Most Kind and Merciful

நிச்சயமாக உங்களிலிருந்தே ஒரு தூதர் உங்களிடம் வந்திருக்கின்றார்;நீங்கள் துன்பத்திற்க்குள்ளாகி விட்டால் அது அவருக்கு மிக்க வருத்தத்தை கொடுக்கின்றது; அன்றி அவர் உங்களையே பெரிதும் விரும்புகிறார்; இன்னும் இறைநம்பிக்கையாளர்கள் மீது மிக்க கருணையும், கிருபையும் உடையவராக இருக்கின்றார்

12

ஸூரத்துன்னிஸாவு
வசனம்: 113

முஹம்மத் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் அருளையும் கிருபையையும் பெற்றவர்கள் - Possessor of Allah's Grace and Mercy

உம் மீது அல்லாஹ்வின் அருளும், அவனுடைய கிருபையும் இல்லாதிருந்தால், அவர்களில் ஒரு கூட்டத்தார் உம்மை வழி தவறி நடக்கும்படி செய்ய முயன்றிருப்பார்கள்; ஆனால் அவர்கள் தங்களையே அன்றி வழி தவறும்படி செய்ய முடியாது; இன்னும் அவர்களால் உமக்கு எந்த விதமான தீங்கும் செய்துவிட முடியாது; மேலும் அல்லாஹ் உம் மீது வேதத்தையும் ஞானத்தையும் இறக்கியுள்ளான்; நீர் அறியாதிருந்தவற்றையும் அவன் உமக்குக் கற்றுக் கொடுத்தான். உம் மீது அல்லாஹ்வின் அருட்கொடை மகத்தானதாகவே இருக்கின்றது. 

13

அவர்களை கொண்டே நம்பிக்கையாளர்களுக்கு இறைவனின் அருள் 

நிச்சயமாக அல்லாஹ் முஃமின்களுக்கு அருள் புரிந்திருக்கின்றான்; அவன் அவர்களுக்கு அவர்களிலிருந்தே ஒரு தூதரை அனுப்பி வைத்தான்; அவர் அவனுடைய வசனங்களை அவர்களுக்கு ஓதிக் காண்பிக்கிறார்; இன்னும் அவர்களைப் பரிசுத்தமாக்குகிறார்; மேலும் அவர்களுக்கு வேதத்தையும் ஞானத்தையும் கற்றுக் கொடுக்கின்றார் - அவர்களோ நிச்சயமாக இதற்கு முன் பகிரங்கமான வழி கேட்டிலேயே இருந்தனர்.

(Certainly, Allah has shown a special favour to the believers by raising among them a (Prophetic) Messenger from among themselves who recites to them His revelations, and purifies them, and teaches them the Scripture and the Wisdom, although before (he came to them) they were in manifest error) 
  
 14

ஸூரத்துல் அன்ஃபால் (9)
வசனம்: 33

முஹம்மத் (ஸல்) அவர்கள் நம்மிடம் இருந்தால் அல்லாஹ் வேதனை செய்வதில்லை - Allah does not punish the people if He is in their midst

ஆனால் நீர் அவர்களிடையே இருக்கும் வரையிலும் அல்லாஹ் அவர்களை வேதனை செய்ய மாட்டான்; மேலும் அவர்கள் பாவமன்னிப்பைக் கேட்டுக் கொண்டிருக்கும் போதும் அல்லாஹ் அவர்களை வேதனை செய்பவனாக இல்லை

15

ஸூரத்துல் ஃபத்ஹ் (48)
வசனம்: 10

முஹம்மத் (ஸல்) அவர்களிடம் வாக்குறுதி செய்வது அல்லாஹ்விடம் வாக்குறுதி செய்வது போன்றது - பைஅத் - Allegiance to Him is allegiance to Allah 


நிச்சயமாக எவர்கள் உம்மிடம் வாக்குறுதி செய்தார்களோ, அவர்கள் அல்லாஹ்விடமே வாக்குறுதி செய்கின்றனர் - அல்லாஹ்வின் கை அவர்களுடைய கைகளின் மேல் இருக்கிறது; ஆகவே, எவன் (அவ்வாக்குறுதியை) முறித்து விடுகிறானோ, நிச்சயமாக அவன் தனக்குக் கேடாகவே (அதை) முறிக்கிறான். எவர் அல்லாஹ்விடம் செய்த அவ்வாக்குறுதியை நிறைவேற்றுகிறாரோ அவருக்கு அல்லாஹ் மகத்தான நற்கூலியை விரைவில் வழங்குவான். 

முஹம்மத் (ஸல்) அவர்களுக்கு குரான் ஷரீஃப் அருளப்பட்டது

16

ஸூரத்துல் ஹிஜ்ர் (15)
வசனம்: 87 

அல்லாஹ் பெருமானாருக்கு ஸூரத்துல் ஃபாத்திஹாவையும், குரான் ஷரீஃபையும் அருளினான் 

நிச்சயமாக நாம் உமக்கு திரும்பத் திரும்ப ஓதக் கூடிய (ஸுரத்துல் ஃபாத்திஹாவின்) ஏழு வசனங்களையும், மகத்தான  குர்ஆனையும் வழங்கியிருக்கின்றோம்.


17

ஸூரத்துந் நஜ்ம் (53)
வசனம்: 3 - 4

Totally Inspired

அவர் தம் இச்சைப்படி பேசுவதில்லை.
அது அவருக்கு வஹீ மூலம் அறிவிக்கப்பட்டதேயன்றி வேறில்லை.



18

ஸூரத்துஷ் ஷூஃரா (26)
வசனம்: 192 - 197

அகிலங்களின் இறைவன் அருள்பாலிக்கப்பெற்ற முஹம்மத் (ஸல்) அவர்களின் இதயத்தில் இறக்கிய குரான் ஷரீஃப் - ரப்பில் ஆலமீன், கல்ப் - Allah revealed the Noble Quran Shareef in His (upon Him be holy benedictions) Blessed Heart

மேலும், நிச்சயமாக இது அகிலங்களின் இறைவனால் இறக்கி வைக்கப்பெற்றது.
ரூஹுல் அமீன் (எனும் ஜிப்ரீல்) இதைக் கொண்டு இறங்கினார்.

அச்சமூட்டி எச்சரிப்பவராக நீர் இருப்பதற்காக உம் இதயத்தின் மீது-

தெளிவான அரபி மொழியில்.

நிச்சயமாக இது முன்னோர்களின் வேதங்களிலும் இருக்கிறது.

பனூ இஸ்ராயீல்களில் உள்ள அறிஞர்கள் இதை அறிந்திருப்பதே அவர்களுக்கு அத்தாட்சியல்லவா?


19

ஸூரத்துல் அலஃக் (96)
வசனம்: 1

The first revelation He (upon Him be holy benedictions) received


படைத்த உம்முடைய இறைவனின் திருப்பெயரைக் கொண்டு ஓதுவீராக.


20

ஸூரத்துல் ஜுமுஆ (62)
வசனம்: 

நம்மை பரிசுத்தப்படுத்த நம்மிலிருந்தே ஒருவர்

அவன்தான், எழுத்தறிவில்லா மக்களிடம் அவனுடைய வசனங்களை ஓதிக்காட்டி, அவர்களைப் பரிசுத்தமாக்கி, அவர்களுக்கு வேதத்தையும், ஞானத்தையும் கற்பிக்கும் படியான தூதரை அவர்களிலிருந்தே அனுப்பி வைத்தான்; அவர்களோ, அதற்கு முன்னர் பகிரங்கமான வழிகேட்டிலேயே இருந்தனர்.

முஹம்மத் (ஸல்) அவர்களின் சீரிய பண்புகள்

21

ஸூரத்துல் அஹ்ஜாப் (33) 
வசனம்: 21

முஹம்மத் (ஸல்) அவர்கள் ஓர் மிக்க அழகிய முன்மாதிரி - உஸ்வதுன் ஹஸனதுன் - an excellent (outstanding) example

அல்லாஹ்வின் மீதும், இறுதி நாளின் மீதும் ஆதரவு வைத்து, அல்லாஹ்வை அதிகம் தியானிப்போருக்கு நிச்சயமாக அல்லாஹ்வின் தூதரிடம் ஓர் மிக்க அழகிய முன்மாதிரி உங்களுக்கு இருக்கிறது.

22

ஸூரத்துல் அஹ்ஜாப் (33) 
வசனம்: 22

உண்மையாளர் - ஸாதிக் (வஸதக) - Truthful

அன்றியும், முஃமின்கள் எதிரிகளின் கூட்டுப் படைகளைக் கண்டபோது, “இது தான், அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் எங்களுக்கு வாக்களித்தது; அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் உண்மையே உரைத்தார்கள்” என்று கூறினார்கள். இன்னும் அது அவர்களுடைய ஈமானையும், (இறைவனுக்கு) முற்றிலும் வழிபடுவதையும் அதிகப்படுத்தாமல் இல்லை.

23

ஸூரத்துல் கலம் (68)
வசனம்: 4

முஹம்மத் (ஸல்) அவர்கள் மிக உயர்ந்த மகத்தான நற்குணம் உடையவர்கள் - வ இன்னக அலயா ஹுலுகின் அளீம் - Recieved a Conduct Certificate as "Exalted Moral Character" from the Almighty

மேலும், நிச்சயமாக நீர் மிக உயர்ந்த மகத்தான நற்குணம் உடையவராக இருக்கின்றீர்.

24 

ஸூரத்துன்னிஸாவு (4)
வசனம்: 65

அவர்களே நீதிபதி

உம் இறைவன் மேல் சத்தியமாக, அவர்கள் தங்களிடையே எழுந்த சச்சரவுகளில் உம்மை நீதிபதியாக, ஏற்றுப் பின்னர் நீர் தீர்ப்பு செய்தது பற்றி எத்தகைய அதிருப்தியையும் தம் மனங்களில் கொள்ளாது முற்றிலும் ஏற்றுக் கொள்ளாத வரையில், அவர்கள் நம்பிக்கை கொண்டவர்கள் ஆகமாட்டார்கள்.

25

ஸூரத்துன்னிஸாவு (4) 
வசனம்: 175

அவர்களே அத்தாட்சி அவர்களே பேரொளி

மனிதர்களே! உங்கள் இறைவனிடமிருந்து உங்களுக்கு அத்தாட்சி வந்து விட்டது; தெளிவான பேரொளியையும் உங்களிடம் இறக்கி வைத்துள்ளோம் 

26 

ஸூரத்துல் ஹாஃக்ஃகா (69)
வசனம்: 40

அவர்கள் கண்ணியமிக்கவர்கள் - கரீம் - Honoured, Noble

நிச்சயமாக, இது கண்ணியமிக்க தூதரின் சொல்லாகும்

27
ஸூரத்துல் அஃராஃப் (7)
வசனம்: 199

முஹம்மத் (ஸல்) அவர்கள் மன்னிக்கும் மாண்பாளர் - Forgiving

எனினும்  மன்னிப்பைக் கைக் கொள்வீராக! நன்மையைக் கடைபிடிக்குமாறு ஏவுவீராக மேலும் அறிவீனர்களைப் புறக்கணித்து விடும்.

28 

ஸூரத்துந் நூர் (24)
வசனம்: 51

அவர்களின் தீர்ப்புக்கு கீழ்படிந்தவர்களே வெற்றியடைந்தவர்கள்
முஃமின்களிடம் அவர்களுக்கிடையே தீர்ப்புக் கூறுவதற்காக அல்லாஹ்விடமும் அவனுடைய தூதரிடமும் அழைக்கப்பட்டால், அவர்கள் சொல் எல்லாம் “நாங்கள் செவியேற்றோம், கீழ்படிந்தோம்” என்பது தான்; இவர்கள் தாம் வெற்றியடைந்தவர்கள்.

29 

ஸூரத்துல் ஆலஇம்ரான் (3)
வசனம்: 121

போர் படைத் தளபதி - Brave: Commands Muslims in battle 

நீர் விடியற்காலையில் உம் குடும்பத்தாரை விட்டுச் சென்று முஃமின்களைப் போருக்காக இடத்தில் நிறுத்தினீர்அல்லாஹ் எல்லாவற்றையும் செவியுறுவோனாகவும் நன்கறிபவனாகவும் இருக்கின்றான்.