பகுதி 1:
இதயத்தில் அழுக்குள்ளவர்கள் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை “நம்மை போன்ற ஒரு மனிதர் தான்” என்று சொல்வார்கள்.
இதயத்தை சுத்தமாக்க பயிற்சி எடுப்பவர்கள் (சூஃபியாக்களின் வழியில் பயணிப்பவர்கள்) அப்படி அழுக்குள்ளவர்கள் சொன்னதை எழுதியதற்கு கூட மன்னிப்பு கோருவார்கள்.
அப்படி அழுக்குள்ளவர்கள் தங்களது கீழான சிந்தனையின் உதவிக்கு ஆதாரமாக குரான் ஷரீஃபின் வாக்கியத்தை கொண்டு வருவார்கள். அப்படி அவர்கள் கொண்டு வந்த ஆயத்து கீழே வருகிறது.
குரான் ஷரீஃப்
18. சூரா கஹ்ஃபு
110வது வாக்கியம்
قُلْ اِنَّمَاۤ اَنَا بَشَرٌ مِّثْلُكُمْ يُوْحٰٓى اِلَىَّ اَنَّمَاۤ اِلٰهُكُمْ اِلٰـهٌ وَّاحِدٌ ۚ فَمَنْ كَانَ يَرْجُوْالِقَآءَ رَبِّهٖ فَلْيَـعْمَلْ عَمَلًا صَالِحًـاوَّلَايُشْرِكْ بِعِبَادَةِ رَبِّهٖۤ اَحَدًا
(நபியே!) நீர் சொல்வீராக: “நிச்சயமாக நான் உங்களை போன்ற ஒரு மனிதனே! நிச்சயமாக உங்களுடைய நாயன் ஒரே நாயன் தான் என்று எனக்கு வஹீ அறிவிக்கப்பட்டிருக்கிறது; எவன் தன்னுடைய இறைவனைச் சந்திக்கலாமென ஆதரவு வைக்கின்றானோ அவன் (ஸாலிஹான) நல்ல செயல்களைச் செய்து, தன் இறைவனை வணங்குவதில் வேறெவரையும் இணையாக்காதும் இருப்பானாக.”
நன்றி: http://www.tamililquran.com/qurandisp.php?start=18
”பார்த்தீர்களா? எவ்வளவு தெளிவாக இருக்கின்றது” என்று மார்தட்டுவார்கள் அந்த அழுக்குவாசிகள். இந்த ஆயத்தை எப்படி விளங்குவது என்பதை பார்ப்போம்.
ஒரு பகுதி மட்டும் வார்த்தைக்கு வார்த்தை அர்த்தம்
குல் - சொல்வீராக..!
இன்னமா (அரபி எழுத்தில் “இ” என்ற எழுத்தில் “அலிஃப்” அல்ல “அம்ஜா” பயன்படுத்தப்பட்டிருக்கிறது சில குரான் ஷரீஃப் பிரதிகளில் என்பதை கவனத்தில் கொள்க) - Only/ Indeed - நிச்சயாமாக..!
அனா - I - நான்
பஷருன் - (am) a man - மனிதன்
மிஸ்லுகும் - like you - உங்களைப் போன்ற
பகுதி 2:
மேற்கொண்டு படிக்கும் முன்னர் முக்கிய மூன்று செய்திகள் தெரிந்து கொள்ள வேண்டியதிருக்கிறது:
1. “குல்’ என்ற வார்த்தை.. அதாவது “சொல்லுங்கள்..” என்ற வார்த்தை. அல்லாஹ் மேலே படித்த, “உங்களை போன்ற மனிதன்” என்பதை பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை மட்டும் தான் சொல்ல சொல்லியிருக்கிறான்.. “யா அய்யுஹல்லதீன ஆமனு..” என்று முஃமீன்களை பார்த்து இந்த வார்த்தையை சொல்லவில்லை. ஆகையினால், இது பெருமானாருக்கு மட்டும் சொல்ல சொன்ன வார்த்தை. வேறு யாருக்கும் இதை சொல்ல அனுமதியில்லை.
இஜட்.ஜபருல்லாஹ் நானா அவர்கள் ஒரு உதாரணம் சொல்வார்கள், ஒரு பெரிய கோடீஸ்வரர் தன்னை தாழ்த்திக் கொண்டு, “நான் என்னங்க... ஒரு முஸாஃபர்..” என்று சொன்னால்... நீங்கள், “அப்படியா இந்தாங்க சோத்து சீட்டு.. பாபா பாய் கடைல கொடுத்தீங்கன்னா சோறு கறி கொடுப்பாரு”ன்னு சொல்லக் கூடாது என்று சொல்வார்கள்.
2. “பஷருன்” என்ற வார்த்தை... “பஷருன்..” என்றால் apparent skin/ apparent feature/ physical form அதாவது வெளிப்புற தோல்.. என்று அர்த்தம். அரபியில் ஒரு வார்த்தைக்கு நூறு அர்த்தம் இருக்கும். “ஸலாத்” என்ற வார்த்தைக்கு “தொழுகை” என்று சொல்கிறோமே, அந்த ஒரு வார்த்தைக்கு மட்டும் 90 அர்த்தங்கள் இருக்கிறதாம்..
”பஷருன்” என்ற வார்த்தைக்கு எதிர்பதம் “ஜின்” (hidden) என்பதாகும்
3. அரபிய இலக்கணத்தில் “இஸ்திஃபாமியா” என்றால் கேள்விகள் என்று அர்த்தம். Dr. Fatai Owolabi Jamiu என்ற நைஜீரிய நாட்டில் உள்ள Ogun மாநிலத்தில் உள்ள அரபிய கல்லூரியில் ”A Transformational- Generative Approach towards Understanding Al-Istifham” என்று ஆய்வு செய்து ஒரு கட்டுரை வெளியிட்டு இருக்கிறார். இது இணையத்தில் பிடிஎஃப் கோப்பாக படிக்க கிடைக்கிறது. இதில் இஸ்திஃபாம் பற்றி 41/42ம் பக்கத்தில் இஸ்திஃபாமுக்கு இவ்வாறு விளக்கமளித்துள்ளார்.
“Seeking for an information on something that is not Known before and always answered by specifying the information required or by using one of the answer tools”.
அதாவது, “முன்னர் அறியப்படாத சில தகவல்களை அறிய முற்படுவதும் எப்பொழுதும் தேவையான பதிலை சொல்வதும் அல்லது பதில் சொல்லும் முறைகளை ஒன்றை பயன்படுத்துவதும் ஆகும்”
அதாவது, ஒரு கேள்வி கேட்கப்படும், அந்த கேள்விக்கு உள்ள பதில் தெரியாது, எப்போதும் பதில் தொடர்ந்து சொல்லப்படும்.
இத்தகைய இஸ்திஃபாமா வகை கேள்வியை பல வகையாக பிரிக்கலாம், அதில் ஒரு வகை அம்ஜா கேள்விகள் என்று ஒன்று உண்டு. (பார்க்க டாக்டரின் ஆய்வு கட்டுரை பக்கம் 42)
أقرأت الكتاب ؟
(இக்ர அல் கிதாப்)
வார்த்தைக்கு வார்த்தை மொழி பெயர்த்து பார்த்தால் - ”கிதாபை படி” என்று ஒரு செய்தி போல் தான் வரும். ஆனால் அதுவே முதல் எழுத்தில் “அம்ஜா” எனும் அரபி எழுத்து சேர்ந்து விட்டால் அதை கேள்வியாக படிக்க வேண்டும்.”கிதாபை படித்தாயா? - Did you read the book?" என்று.
மேலே சொன்ன மூன்று செய்திகளையும் மனதில் வைத்துக் கொண்டு கீழே உள்ளளதை படியுங்கள்:
பகுதி 3:
மேலே வார்த்தைக்கு வார்த்தைக்கு மொழி பெயர்த்திருக்கும் 4 வார்த்தைகளை மட்டும் தமிழில் எழுதுவதாக இருந்தால் எப்படி எழுதுவோம்.
“சொல்வீராக...! நிச்சயமாக நான் உங்களை போன்ற மனிதன்.”
நான் அதே வாக்கியத்தை கொஞ்சம் மாத்தி எழுதறேன்.. இப்போது படித்து பாருங்கள்..
“சொல்வீராக...! நிச்சயமாக நான் உங்களை போன்ற மனிதன்?”
என்ன வித்தியாசம் என்றால் முதல் மொழிபெயர்ப்பின் வார்த்தையின் இறுதியில் முற்றுப்புள்ளி இருந்தது இரண்டாவது மொழிபெயர்ப்பின் வார்த்தையின் இறுதியில் கேள்விக்குறி இருக்கிறது.
’இன்னமா” என்று ஆரம்பிக்கும் வார்த்தையில் “அலிஃப்” அல்லாமல் “அம்ஜா” வந்திருந்தால் அது அரபி கிராம்மரில் (இஸ்திஃபாமியா) கேள்வி போல் படிக்க வேண்டும் என்று ஒரு சரத்து உள்ளது.
உதாரணமாக, 6. சூரத்துல் அன்ஆம்
76வது வாக்கியம்
”ஆகவே அவரை இரவு மூடிக் கொண்டபோது அவர் ஒரு நட்சத்திரத்தை பார்த்தார், “இதுதான் என் இறைவன்!” என்று கூறினார்.....”
இந்த வாக்கியத்தில் இப்ராஹீம் நபியவர்கள் நட்சத்திரத்தை பார்த்து “இதுதான் என் இறைவன்! (ஹாதா ரப்பி என்ற அரபி வார்த்தை)” என்று ஒரு செய்தியாக கூறினார்கள் என்று படித்து வந்திருக்கின்றோம். அப்படியல்ல.. இப்ராஹீம் நபி அலைஹிஸ்ஸலாத்து வஸலாம் அவர்கள் எந்த காலத்திலும் எதனையும் இறைவன் என்று கூறவில்லை. குரான் ஷரீஃப் முழுக்க இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாத்தை பற்றி அல்லாஹ் “ஹனிஃப்” (பார்க்க: 3வது ஸூரா 67வது ஆயத்) என்பதாக புகழ்ந்து கூறுகிறான்.
அப்போ இந்த வாக்கியத்தை எப்படி படிக்கணும்னா இறுதியில் ஒரு கேள்விக்குறியை சேர்த்து படித்து பார்க்க வேண்டும். இதற்கு பெயர் அரபி இலக்கணத்தில் “இஸ்திஃபாமியா - கேள்விகள்” என்று சொல்லப்படுகிறது. அம்ஜா மறைவாக உள்ளது.
”ஆகவே அவரை இரவு மூடிக் கொண்டபோது அவர் ஒரு நட்சத்திரத்தை பார்த்தார், “இதுதான் என் இறைவன்?” என்று கூறினார்.....”
அதாகப்பட்டது, இதுதான் என் இறைவன் என்று ஆச்சர்யப்பட்டவில்லை, அவர்கள் கேள்வியாக கேட்கிறார்கள், “இதுவா என் இறைவன்?” என்று - நிச்சயமாக இல்லை என்ற தொனியோடு கேட்கிறார்கள்.
அதனால் தான் அந்த கேள்விக்கு பதிலளிக்கும் விதமாக ”... ஆனால் அது மறைந்த போது அவர், “நான் மறையக் கூடியவற்றை நேசிக்க மாட்டேன்” என்று சொன்னார்” என்று வருகிறது.
அதே போல் தான் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை மக்கத்து காபிர்கள் “என்னா பெரிய தூதுவர், எங்களை போன்ற மனிதர் தான்” என்று அவர்கள் கூறிய போது, பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை பார்த்து நீங்கள் சொல்லுங்கள், “நான் என்ன உங்களை போல மனிதனா?” - நிச்சயமாக இல்லை என்ற தொனி இங்கே இருக்கின்றது.
அதனால் தான் அந்த கேள்விக்கு பதிலளிக்கும் விதமாக ”... (யூஹா இலய்ய) எனக்கு வஹி வருகின்றது....” என்று சொல்கிறார்கள்.