Thursday, January 7, 2016

நவீன சாமிரிகள்

குரான் ஷரீஃப் வசனம்:


நிச்சயமாக எவர்கள் காளைக் கன்றை (இறைவனாக) ஆக்கிக் கொண்டார்களோ அவர்களை, அவர்கள் இறைவனிடமிருந்து கோபமும், இவ்வுலக வாழ்க்கையில் இழிவும் சீக்கிரமே வந்து சேரும்; பொய்க் கற்பனை செய்பவர்களுக்கு நாம் இவ்வாறே கூலி கொடுப்போம்.


-ஸூரத்துல் அஃராஃப் (சிகரங்கள்) - 152 வது வசனம்


இந்த வசனம் ரொம்ப முக்கியமாக கவனிக்கப்பட வேண்டிய வசனம். 

அதாவது யாகூர் நபி என்றழைக்கப்பட்ட இஸ்ராயீலின் சந்ததிகளை பிர்அவ்ன் எனும் அரசன் அடிமையாக்கி தன்னையே கடவுளென வணங்கி வரும் படியும் ஏவினான். இறைவன் அந்த மக்களை மூஸா நபி மூலமாக காப்பாற்றி பிர் அவ்னையும் அவன் கூட்டத்தாரையும் அழித்த பிறகு இறைவனிடமிருந்து செய்தியை பெற தூர்சினாய்க்கு செல்கிறார்கள்.

மூஸா நபிய்வர்கள் 40 நாட்கள் தான் தன்னுடைய மக்களை விட்டு பிரிந்து போனார்கள், வேறு எங்கும் அல்ல, இறைவனைக் கண்டு கட்டளைகளை பெற்று வர தூர்சினாய்க்கு தான் சென்றார்கள். 


இறைவன் மூஸா நபியவர்களுக்கு உண்மையான இறை மார்க்கத்தை எடுத்துரைத்துக் கொண்டிருக்கும் அதே நேரத்தில் போலியான இன்னொரு போட்டி மார்க்கத்தை சாமிரி என்பவர் உருவாக்கினார். எந்த மக்கள் இறைவனின் அத்தாட்சியை கண்கூடாக பார்த்தார்களோ அதே மக்கள் அந்த சாமிரி உருவாக்கின அந்த போட்டி மதத்தை உடனே ஏற்றுக் கொண்டார்கள். 

திரும்பி வந்து சாமிரியிடம் மூஸா நபியவர்கள் இது பற்றி ’உன் விஷயமென்ன?’ என்று கேட்டபோது அவன் அழகாக பதில் சொன்னான்.


“அவர்கள் காணாத ஒன்றை நான் கண்டேன்; ஆகவே, நான் அந்த தூதர் காலடியிலிருந்து ஒரு பிடி (மண்ணாகப்) பிடித்து, அதை எறிந்தேன்; அவ்விதம் (செய்வதை) என் மனம் எனக்கு அழகா(ன செயலா)க ஆக்கிற்று” என (ஸாமிரி பதில்) சொன்னான்.


-ஸூரத்து தாஹா - 96 வது வசனம்


அவர்கள் காணாத ஒன்றை சாமிரி கண்டு இருக்கிறார். 


எதில் கண்டு இருக்கிறார்?


தூதரின் காலடி மண்ணில், 


- சாமிரி பொய் சொல்லவில்லை என்று கொண்டால் (உண்மையும் அது தான்), இதிலிருந்து நாம் சில உண்மைகளை தெரிந்து கொள்ளலாம்.


1. தூதரின் காலடி மண்ணில் ஏதோ ஒரு அற்புதம் இருந்திருக்கிறது.


2. தூதரின் காலடியில் இருந்த ஏதோ ஒரு அற்புதத்தை சாமிரியும் கண்டு இருக்கிறார்.


3. மற்றவர்களுக்கு இந்த அற்புதம் விளங்கவில்லை, அவர்கள் இந்த அற்புதத்தை கவனிப்பாராகவும் இருக்கவில்லை.


4. மற்றவர்களை விட சாமிரியான இவர் மறைவான உண்மைகளை அறியக்கூடியவராகவும் இருந்திருக்கிறார். 


5. அந்த தூதர் காலடி பட்ட மண்ணுக்கு எந்த அளவுக்கு சக்தி இருந்தது என்றால் அதை சாமிரி எறிந்த போது காளைக் கன்றுக்கு சப்தம் (அதாவது உயிர் வந்தது போல்) தோன்றியது.


6. அப்படி போலியான போட்டி மதத்தை உருவாக்க தூதரின் காலடி மண்ணில் தான் பார்த்த அந்த மறைவான அற்புதத்தை பயன்படுத்திக் கொண்டார்.


7. அவ்வாறு அவர் உருவாக்குவதை அவரின் மனம் அவருக்கு அழகான செயலாக காட்டியிருக்கிறது.


நபிகளின் வரிசையில் முத்திரை முடிந்து 1400 வருடங்கள் ஆகி விட்டன. இதற்கிடையில் நம்மிடம் எத்தனையோ சாமிரிகள் எத்தனையோ காளைகன்றை கொண்டு வந்து விட்டனர்.


சிலர் கேஸட், சிடி போட்டு உண்மைக்கு புறம்பானவற்றை கொண்டு வந்தார்கள், 


சிலர் அரசியல், பணம், பதவியை கொண்டு வந்தார்கள். 

சிலர் மந்திரம், தந்திரம் செய்து காட்டினார்கள். 

சிலர் தன்னை இறை தூதர் என்றே காதில் காதியானி சொன்னார்கள்.

இவ்வாறு தங்களின் மனம் அவர்களுக்கு எதையெல்லாம் அழகாக காட்டியதோ அந்த அழகிய பேச்சுக்களை எல்லாம் விற்பனை செய்து வந்தார்கள். மூஸா நபி இறங்கி வந்ததை போல் இமாம் மஹதி (றஹ்) அவர்கள் வரும் வரை காத்திருக்கத் தான் வேண்டும்...


"There are as many paths to God as there are souls on Earth." - ஹதீது

No comments: