Thursday, January 7, 2016

சொர்க்கத்தில் ஆண்களுக்கு ஹூருல் ஈன்.. பெண்களுக்கு..? -

1

18 வயசு, 28 வயசு, 38 வயசு இந்த மூன்று வயதினருடைய பெண்களுக்கு திருமணம் ஒரே நேரத்தில் நடந்ததாம். திருமணம் நல்லவிதமாக நடந்தேறி தம்பதியர் தனியறைக்குள் விடப்பட்டனர்.

மறுநாள் காலையில்,..

38 வயதுடைய பெண்மணி தாமாகவே கதவை திறந்து கொண்டு வெளியே வந்து விட்டார்.

28 வயதுடைய பெண்மணியுடைய அறையின் கதவை காலையில் தட்டினார்கள். கதவை திறந்து வெட்கத்துடன் வெளியேறினார்.

18 வயதுடைய பெண்மணியுடைய அறையின் கதவு தட்டப்பட்டது. அந்த பதின்ம வயதுடைய பெண்மணி கதவை திறந்தாள்.. "குட் நைட்" என்று சொல்லி விட்டு மீண்டும் அறையை சாத்தி கதவை கொலுக்கு (கொலுக்கு - தாழ்ப்பாள்) போட்டுகிட்டார்.

மேலே கண்டது எப்போதோ ராணி வார இதழில் அல்லியின் பதில்களில் படித்து ரசித்தது.  

ஒரு ஜோடி கோர்ட்டுக்கு டைவோர்ஸ் கேட்டு போயிருக்கு, "எங்க ரெண்டு பேருக்கும் டைவோர்ஸ் வேணும்.." என்று

சம்மந்தப்பட்டவர் கேட்டிருக்கிறார், "நீங்க எப்போ கல்யாணம் பண்ணிகிட்டீங்க..?" என்று

அதுக்கு அந்த ஜோடிங்க இப்படி பதில் சொல்லியிருக்கு, "இனிமே தாங்க நாங்க கல்யாணம் பண்ணிக்கவே போறோம், ஆனா எப்படியும் இங்கே வர வேண்டியதிருக்கும், அதான் முன்னாடியே எதுக்கும் ரிசர்வ் பண்ணி  வச்சுக்கலாம்னு.." என்று எதையும் பிளேன் பண்ணி செய்கின்ற வடிவேலு டைப் தம்பதிகள் சொல்லியிருக்கிறார்கள்.

இப்பல்லாம் பிள்ளை பிறப்பதற்கு முந்தி ஸ்கூல் அட்மிஷன் வாங்க கியுவில் நிற்கிற மாதிரி கல்யாணம் முடியிறதுக்கு முன்னாடியே விவாகரத்து கேட்டு கியுவில இடம் பிடிக்க வந்துடறாங்க.. உலகம் அவ்வளவு அட்வான்ஸா போயிகிட்டு இருக்கு..

"இதெல்லாம் இருக்கட்டும்,  இந்த கேள்விக்கு பதில் சொல்லுங்கள்" என்று 

எனது நண்பர்களும் 

என் மதத்திற்கு எதிராளிகளுமான, 

ஒரு மாதிரி பெண்களின் நலனில் அக்கறையுள்ள கனவான்களும் 

எனது "நண்பராளிகளு"மானவர்கள் கேட்கிறார்கள்,

"சொர்க்கத்திலே ஆண்களுக்கு ஹூருல் ஈன் எனப்படும் கண்ணழகிகள் பரிசாக அளிக்கப்படுவது  போல் பெண்களுக்கும் ஏதாவது  பரிசு கிடைக்குமா.." 

- என்கிற ரீதியில்.

இந்த கேள்வியில் அப்படி ஒன்றும் எனக்கு பெரிய ஆச்சர்யம் ஏதுமில்லை. 

அவர்களின் இந்த கேள்வியில் அவர்களாக தீர்மானம் செய்து கொண்ட விஷயங்கள் நிறையவே உள்ளதாக நான் புரிந்து கொண்டதை கீழே குறிப்பிடுகிறேன்..

1. ஹூருல் ஈன் நிச்சயமாக ஒரு பெண் தான்

2. அந்த ஹூருல் ஈன்களும் ஆண்களுக்கு மட்டுமே பரிசாக அளிக்கப்படுவார்கள்

3. அதுவும் அந்த ஹூருல் ஈன்கள் ஆண்கள் தங்களின் காம இச்சையை சொர்க்கத்தில் வைத்து தீர்த்து கொள்வதற்காக தான் (அல்லது முதன்மையாக இந்த காரணத்திற்காகவே) படைக்கப்பட்டுள்ளார்கள் 

4. ஹூருல் ஈன்களை ஆண்களுக்கென படைக்கப்பட்டதை போன்று பெண்களுக்கு படைக்காததால் ஆணாதிக்கம் இதில் வெளிப்படையாகவே பல் இழிக்கிறது

இப்படியாக அவர்களின் குற்றச்சாட்டுகளின் அடுக்குகள் உயர்ந்து விண்ணை முட்டுகிறது.

இதெல்லாம் 'சொர்க்கத்துக்கு போறவங்கள்ள.. கவலைப்படணும்.. நமக்கு எதுக்கு பாஸ் அந்த கவலைல்லாம்..' என்று ஒரே பதிலில் நம்மோடு அவர்களையும் நரகத்துகு இழுக்கலாம் என்று பார்த்தால் 'அது எப்படி உங்க அமைதி இல்லத்துக்கு' எல்லாம் எங்களை கூப்பிடுறீங்க என்று கேட்பார்களோ என்று பயமாகவும் இருக்கிறது.

2

மூலத்திலிருந்து மொழி பெயர்த்து வேறொரு மொழியில் சொல்லப்படும் போது அந்த மொழி பெயர்ப்பு மூலத்தில் உள்ள அத்தனை கருத்துக்களையும் உள்ளடக்கி அதே அழகியலோடு எத்தகைய பண்டிதரும் வெளியிட முடியாது என்பது நிரூபணம்.

இதற்கு ஏராளமான உதாரணங்களை சொல்ல முடியும் என்றாலும் என் வேலையிடத்தில் நேர்ந்த அனுபவத்தை மட்டும் குறிப்பிடுகிறேன்.

"Fire Alarm Goes Off.." என்ற ஆங்கில வார்த்தையை ஒருவர் இவ்வாறு மொழி பெயர்த்திருந்தார், "தீ எச்சரிக்கை ஒலி அணைந்து விட்டது.." என்று. 

அதாவது அவர் நேரடியாக ஒவ்வொரு வார்த்தைக்கும் அகராதியை பார்த்து அப்படியே மொழி பெயர்த்து இருந்தார். மொத்தத்தில் பார்க்கும் போது பொருள் மாறுபட்டு தவறாகி எதிராகவே ஆகி இருந்தது.

இன்னொருவர் 'house keeping" என்ற வார்த்தையை "வீட்டை வைப்பது" என்று மொழி பெயர்த்திருந்தார். 

இப்படி நேரடியாக மொழி பெயர்த்தால் தவறான கருத்துக்களையே வெளிக் கொண்டு வரும். அது மூலத்தில் என்ன கருத்தை சொல்ல வந்ததோ அதை முழுமையாக புரிந்து கொள்ள உதவவே முடியாது.

மேற்கொண்டு படிக்கும் முன் மேலே சொன்னதை விளங்கி ஒத்துக் கொண்டால் தொடர்ந்து படிப்பது நன்மை பயக்கலாம்.

இந்த உலகத்தில் நன்மை புரிந்தவர்களுக்கு சொர்க்கத்தில் பலவிதமான கௌரவங்கள் அளிக்கப்படுவதில் குறிப்பாக ஹூருல் ஈன் எனப்படுபவர்களும் உண்டு. 

ஹூருல் ஈன்களை பற்றி குரான் ஷரீஃப் சொல்வதை பல மொழிபெயர்ப்பாளர்கள் பலவாறாக மொழிபெயர்த்துள்ளார்கள். 

நாம் இங்கே ஒரு சில ஆங்கில மொழி பெயர்ப்புகளை கவனிப்போம்.. நான் ஒரு மொழி பெயர்ப்பை மட்டும் தனி அடையாளத்துடன் சற்று பெரிதாக வேறு வர்ணத்தில் காட்டியிருக்கிறேன். 

அதை கொஞ்சம் முனைப்புடன் படிக்க வேண்டுகிறேன்.

3

குரான் ஷரீஃபில் ஹூருல் ஈன்கள் பற்றி வரும் வசனங்கள்
--------------------------------------------------------------------
A

And besides them will be chaste women, restraining their glances, with big eyes (of wonder and beauty)
- A.Yusuf Ali

And with them are those of modest gaze, with lovely eyes
- Marmaduke Pickthall

And with them will be chaste females, restraining their glances (desiring none except their husbands), with wide and beautiful eyes
- Dr Hilali & Dr. Mohsin Khan

And with them shall be those who restrain the eyes, having beautiful eyes;
- M.H.Shakir

And with them will be mates of modest gaze, most beautiful of eye
- Asad

ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத்
வசனம் - 37:48

மேலே குறிப்பிட்டிருக்கும் வசனத்தில் ஆஸாத் அவர்களின் மொழி பெயர்ப்பை கவனித்தால் ஹூருல் ஈனை அவர் பெண் பாலோடு ஒப்பிடவே இல்லை.
--------------------------------------------------------

B

And beside them will be chaste women restraining their glances, (companions) of equal age
- A.Yusuf Ali

And with them are those of modest gaze, companions
- Marmaduke Pickthall

And beside them will be chaste females (virgins) restraining their glances only for their husbands, (and) of equal ages
- Dr Hilali & Dr. Mohsin Khan

And with them shall be those restraining their eyes, equals in age
- M.H.Shakir

Having beside them well-matched mates of modest-gaze
- Asad

ஸூரத்து ஸாத்
வசனம் - 38:52

மேலே வரும் வசனத்தில் அவர்களுடன் (அவர்கள் என்றால் ஆண் பாலும் அல்ல பெண் பாலும் அல்ல) மிகவும் பொருத்தமான - வெல் மேச்ட் - ஹூருல் ஈன்கள் இருப்பதாக சொல்லப்படுகிறது.

--------------------------------------------------------------------------

C

In them will be (Maidens), chaste, restraining their glances, whom no man or Jinn before them has touched;-
- A.Yusuf Ali

Therein are those of modest gaze, whom neither man nor jinni will have touched before them.
- Marmaduke Pickthall


Wherein both will be those (maidens) restraining their glances upon their husbands, whom no man or jinn yatmithhunna (has opened their hymens with sexual intercourse) before them.
- Dr Hilali & Dr. Mohsin Khan


In them will be (Maidens), chaste, restraining their glances, whom no man or Jinn before them has touched;-
- M.H.Shakir

In these (gardens) will be mates of modest gaze, whom neither man nor invisibe being will have touched ere then
- Asad

ஸூரத்து ரஹ்மான்
வசனம் - 55:56

மேலே வரும் வசனத்தில் ஹூருல் ஈன்களை புதிதாக படைக்கப்பட்டவர்களைப் போல் யாரும் தொடாத புனிதமானவர்களாக சொல்கிறது
---------------------------------------------------------------------------------

4

ஆக, இது வரை குரான் ஷரீஃப் வசனத்தை கவனித்ததிலிருந்து ஹூருல் ஈன் எனப்படுபவர்கள் யாரெனில்,

Mates - தோழமையானவர்கள் அல்லது துணையானவர்கள்

Modest Gaze - அடக்கமான பார்வையுடையவர்கள்

Most Beautiful of Eye - அழகிய கண்களையுடைவர்கள்

Well-matched - மிகவும் பொருத்தமான துணையாளர்கள்

Neither man nor invisible being will have touched ere then - களங்கமற்றவர்கள்

ஆக மேற்கூறிய குணாதிசியங்களை உடைய ஹூருல் ஈனானவர்கள் சொர்க்கவாசிகளுக்கு (ஆண் பெண் இருபாலரையும்  குறிக்கும்) துணையாக இருப்பார்கள் என்பதை விளங்க முடிகிறது.

துணை என்றால் நமக்கு நினைவிற்கு வருவது 'பாலியல் உறவு' மட்டும் தான். ஆனால் அந்த உறவுக்காக மட்டுமே துணையாக ஏற்றுக் கொள்பவர்கள் சனவரியில் காதலித்ததை போல் டிசம்பரில் காதலிப்பது இல்லை. 

ஆனால் ஹூருல் ஈன் எனப்படும் இந்த துணையானது பாலியல் ஈர்ப்பு சம்மந்தப்பட்ட இச்சையை தீர்த்துக் கொள்வதற்காக அல்ல.. 

அவர்கள் சொர்க்கவாசிகளிடத்தில் ஒரு கருத்து வேறுபாடுகளும் தோன்றாத மிகவும் பொருத்தமான (Well - Matched) ஒரு துணை (Companion).

5
குரான் ஷரீஃபில் ஹூருல் ஈன்கள் ஒரு சிறந்த துணை என்பதை மெய்ப்பிக்கும் வசனங்கள்..
-------------------------------------------------------------------------------------------------

Companions:

A

So; and We shall wed them to maidens with beautiful, big, and lustrous eyes
- A.Yusuf Ali

Even so (it will be). And We shall wed them unto fair ones with wide, lovely eyes.
- Marmaduke Pickthall

So (it will be), and We shall marry them to Houris (female fair ones) with wide, lovely eyes.
- Dr Hilali & Dr. Mohsin Khan


Thus (shall it be), and We will wed them with Houris pure, beautiful ones.
- M.H.Shakir

Thus shall it be. And we shall pair them with companions pure, most beautiful of eye
- Asad

ஸூரத்துத் துகான்
வசனம் - 44:54
----------------------------------------------------------------
B

They will recline (with ease) upon couches arranged in ranks; and We shall wed them to Maidens, with beautiful big and lustrous eyes.
- A.Yusuf Ali


Reclining on ranged couches. And we wed them unto fair ones with wide, lovely eyes.
- Marmaduke Pickthall

They will recline (with ease) on thrones arranged in ranks. And We shall marry them to Houris (female, fair ones) with wide lovely eyes.
- Dr Hilali & Dr. Mohsin Khan

Reclining on thrones set in lines, and We will unite them to large-eyed beautiful ones.
- M.H.Shakir

Reclining on couches (of happiness) ranged in rows!" And (in that paradise) We shall mate them with companions pure, most beautiful of eye

- Asad

ஸூரத்துத் தூர்
வசனம் - 52:20
----------------------------------------------------------------
C

70:In them will be fair (Maidens), good, beautiful;-
72: Maidens restrained (as to their glances), in (goodly) pavilions;-
- A.Yusuf Ali


70:Wherein (are found) the good and beautiful -
72:Fair ones, close-guarded in pavilions 
-- Marmaduke Pickthall


70:Therein (gardens) will be fair (wives) good and beautiful;
72:Houris (beautiful, fair females) restrained in pavilions;
- Dr Hilali & Dr. Mohsin Khan


70:In them will be fair (Maidens), good, beautiful;-
72:Maidens restrained (as to their glances), in (goodly) pavilions;-
- M.H.Shakir


70: In these (gardens) will be (all) things most excellent and beautiful
72: (There the blest will live with their) companions pure and modest, in pavilions (splendid) -
- Asad

ஸூரத்துர் ரஹ்மான்
வசனம் - 55:70, 72
-------------------------------------------------------------------

D
And (there will be) Companions with beautiful, big, and lustrous eyes,-
- A.Yusuf Ali



And (there are) fair ones with wide, lovely eyes,
- Marmaduke Pickthall

And (there will be) Houris (fair females) with wide, lovely eyes (as wives for the pious),
- Dr Hilali & Dr. Mohsin Khan



And (there will be) Companions with beautiful, big, and lustrous eyes,-
- M.H.Shakir

And (with them will be their) companions pure, most beautiful of eye,
- Asad

ஸூரத்துல் வாகிஆ
வசனம் - 56:22
---------------------------------------------------------------------------
E
35:We have created them of special creation.
36:And made them virgin - pure (and undefiled), -
37:Full of love (for their mates), equal in age,-
38: For the Companions of the Right Hand.
- A.Yusuf Ali


35:Lo! We have created them a (new) creation
36: And made them virgins,- Marmaduke Pickthall
37:Lovers, friends,
38: For those on the right hand;
- Marmaduke Pickthall


35:Verily, We have created them (maidens) of special creation.
36:And made them virgins,
37:Loving (their husbands only), equal in age.
38: For those on the Right Hand.
- Dr Hilali & Dr. Mohsin Khan


35:We have created them of special creation.
36:And made them virgin - pure (and undefiled), 
37:Full of love (for their mates), equal in age,-
38:For the Companions of the Right Hand.
- M.H.Shakir


35:For, behold, We shall have brought them into being in a life renewed,
36:having resurrected them as virgins,
37: full of love, well-matched
38: with those who have attained to righteousness:
- Asad

ஸூரத்துல் வாகிஆ
வசனம் - 56:35-38
----------------------------------------------------------------------------
F

Madians of equal age;
- A.Yusuf Ali



And maidens for companions,
- Marmaduke Pickthall


And young full-breasted (mature) maidens of equal age;
- Dr Hilali & Dr. Mohsin Khan

And those showing freshness of youth, equals in age,
- M.H.Shakir

And splendid companions well-matched
- Asad

ஸூரத்துந் நபா
வசனம் - 78:33
----------------------------------------------------------------------------
6

எல்லாவற்றிற்கும் மேலாக இந்த உலகத்தில் நன்மை புரிந்தவர்கள் சொர்க்கத்தில் நுழையும் போது குடும்பம் குடும்பமாக வருவதாக சொல்லப்படுகிறது. அதிலும் முக்கியமாக தனது வாழ்க்கை துணையோடு நுழைவதாக சொல்லப்பட்டு இருக்கிறது. 


சொர்க்கத்தில் குடும்பத்தோடு ஒன்று  சேருவதாக  குரான்  ஷரீஃபில்  வரும்  வசனம்:  

Gardens of perpetual bliss: they shall enter there, as well as the righteous among their fathers, their spouses, and their offspring: and angels shall enter unto them from every gate (with the salutation):
- A.Yusuf Ali

Gardens of Eden which they enter, along with all who do right of their fathers and their helpmeets and their seed. The angels enter unto them from every gate,
- Marmaduke Pickthall



'Adn (Eden) Paradise (everlasting Gardens), which they shall enter and (also) those who acted righteously from among their fathers, and their wives, and their offspring. And angels shall enter unto them from every gate (saying):
- Dr Hilali & Dr. Mohsin Khan

The gardens of perpetual abode which they will enter along with those who do good from among their parents and their spouses and their offspring; and the angels will enter in upon them from every gate:
- M.H.Shakir

Gardens of perpetual bliss, which they shall enter together with the righteous from among their parents, their spouses, and their offspring; and the angels will come unto them from every gate (and will say);
- Asad

ஸூரத்துர் ரஃது
வசனம் - 13:23
--------------------------------------------------------------------------------------

7

இறுதியாக, நான் அறிந்தது தெரிந்ததிலிருந்து சொல்ல வருவது இது தான்.

1. சொர்க்கத்தில் நன்மை புரிந்தவர்கள் தங்கள் மனைவி மக்களோடு இருப்பார்கள்

2. அவர்களுக்கு சொர்க்கத்தில் வழங்கப்படும் பரிசுகளில் பேச்சு துணைக்கென எந்த கருத்திலும் மாறுபடாத நல்ல துணையும் உண்டு.

3. அந்த துணை ஆணும் அல்ல பெண்ணும் அல்ல

4. அந்த துணை ஆணுக்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த அந்த குடும்பத்திற்கே என்று கூட கொள்ளலாம்

5. அதிலும் நிச்சயமாக செக்ஸ் உறவுக்காக அல்ல.. (செக்ஸ் என்பது பிள்ளை பெறுவதற்காக மட்டுமே உள்ளது.. அது வியாபாரப் பொருளோ அல்லது நினைத்த நேரத்தில் தீர்த்துக் கொள்வதற்காக செயலாக்கப்படும் ஒரு அடிமைப் பொருளோ அல்ல)

6. ஹூர் என்ற வார்த்தை பெண்ணை மட்டும் தான் குறிக்கிறது என்று கொள்ள வேண்டிய அவசியமில்லை உதாரணமாக கத்ரினா புயல், ரீட்டா புயல் என்கிறீர்கள் கங்கா, யமுனா, சரஸ்வதி என்றும் சொல்கிறீர்கள் - இதற்கும் பெண்களுக்கும் என்ன தொடர்பு உள்ளதோ அந்த அளவுக்கு மட்டுமே ஹூருல் ஈனுக்கும் பெண்ணுக்கும் தொடர்பு உள்ளது.

7. ஆண் பெண் என்ற பாகுபாடின்றி ஒவ்வொருவரும் அவரவர் செய்த நன்மை தீமைக்கு ஏற்ப நீதியான முறையில் வாக்களிக்கப்பட்டுள்ள இறை தீர்ப்பு நிச்சயம் வழங்கப்படும்

8. இஸ்லாத்தில் சமத்துவமே கருப்பொருளின் மையமாக உள்ளது.

No comments: