Thursday, January 7, 2016

ரமலான் நோன்பு - குரான் ஷரீஃபின் வசனம் - இணைப்புகள்

குரான் ஷரீஃப்

2வது அத்தியாயம் - ஸூரத்துல் பகறா (பசு மாடு)

62வது வசனம்

ஈமான் கொண்டவர்களாயினும், யூதர்களாயினும், கிறிஸ்தவர்களாயினும், ஸாபியீன்களாயினும் நிச்சயமாக எவர் அல்லாஹ்வின் மீதும், இறுதி நாள் மீதும் நம்பிக்கை கொண்டு ஸாலிஹான (நல்ல) அமல்கள் செய்கிறார்களோ அவர்களின் (நற்) கூலி நிச்சயமாக அவர்களுடைய இறைவனிடம் இருக்கிறது; மேலும் அவர்களுக்கு யாதொரு பயமுமில்லை; அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள்.

*******************************************************
மேலே உள்ள வசனம் இஸ்லாம் எப்படி இஸ்லாம் அல்லாத மற்ற நம்பிக்கையாளர்களை அணுகுகிறது என்பதற்கு ஒரு சான்றாகும்.

அத்தோடு அந்த வசனத்தில் யூதர்கள், கிறிஸ்தவர்கள் என்ற பெரும்பான்மையானவர்கள் கொண்டிருக்கும் நம்பிக்கையோடு ஸாபியீன்கள் என்ற நம்பிக்கையாளர்களையும் சேர்த்துக் கொள்கிறது. - ஸாபியீன்களை பற்றிய ஒரு கட்டுரை இதோ:
http://maviboncuk.blogspot.com/2006/12/sabians-yazdnism-and-alevism.html

இந்த சாபியீன்கள் என்ற குறைவான எண்ணிக்கையில் இருந்த (ஸாபியீன்கள் என்பது யூத, கிறிஸ்தவ நம்பிக்கை அல்லாத மற்ற அனைத்து நம்பிக்கையாளர்களையும் உள்ளடக்கியது என்பது ஒரு சாராரின் கருத்தாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது) போதிலும் குரான் ஷரீஃபின் இந்த குறிப்பிட்ட வசனத்தில் அவர்களையும் சேர்த்து கொண்டதிலிருந்து  இஸ்லாத்தின் உலகலாவிய அரவணைப்பும் மிகுந்த கருணையுடைய இறைவனின் பேரன்புமே பிரதிபலிக்கின்றது.
மேலும், இந்த வசனம் மூலம் இஸ்லாமிய தீவிரவாதம் முஸ்லீம் தீவிரவாதிகள் என்று பொய்யான தோற்றத்தை ஏற்படுத்தும் சகோதரர்களிடத்திலே தோலில் கை போட்டு இஸ்லாம் தனது Religious Toleranceஐ பற்றி சொல்லிக் கொள்கிறது.

*******************************************************

ஒரு முஸ்லீம் அல்லாதவரின் ரமலான் மாத அனுபவங்கள்:

http://www.facebook.com/group.php?gid=148359471843894&v=app_2373072738#!/group.php?gid=148359471843894&v=wall

ஆரன் என்ற கிறிஸ்தவ மதத்தை சேர்ந்த சகோதரரின் நோன்பு:

http://pthree.org/2010/08/09/looking-forward-to-ramadan/

இவர்களுக்கு இவர்களுடைய (நற்) கூலி அவர்களுடைய இறைவனிடத்தில் உண்டு என்று நம்புவோமாக..

**********************************************************

No comments: